ஹலோ FM 89.5 உங்களுடன் எப்பொழுதும் (Hello FM 89.5)


வெற்றிக்கொடி கட்டிக் கொண்டு நம் காற்றலைகளில் மிதந்து வருகிறது,ரேடியோ ஹலோ F M 89.5. இது வரை கார்களில் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த வானொலி இதோ நாளை முதல் மிகவும் துல்லியமாகத் தெளிவாக நம் வீட்டு ஹாலில் கூட ஒலிக்கப் போகிறது.

வெறும் பாடல்கள் மட்டுமே இத்தனை நாட்களாக வந்து கொண்டிருக்க , எப்பொழுது தான் இதன் துவக்கம்? என்று தமிழர்களின் ஏக்கத்தைத் தூண்டி விட்டு ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் நாளை முதல் அறிவிப்பாளர்களின் குரலோடு தொடர்ந்து 24 மணி நேரமும் நம்முடன் இணைந்து இருக்கப் போகின்றது ஹலோ FM 89.5.இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒன்றல்ல ரெண்டல்ல 895 தங்க நாணயங்கள் பரிசாகவும் கிடைக்கப் போகிறது. 89.5 FM –ன் எண் வரிசைக்கேற்ப பரிசும் அமைந்து இருக்கிறது
.
இது நாள் வரை வளைகுடா நாடுகளில் எந்த ஒரு தமிழ் பண்பலையும் 24 மணி நேர சேவை செய்த்தில்லை.முதன் முதலாக ஒலிக்கும் ஹலோவிற்கு இந்த ரசிகர்களின் ஹலோ.அமீரகத்தில் உங்களின் ஒலிச்சேவை தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்.

Comments

  1. சக்தி எஃப்.எம். முன்பு 12 மணி நேர சேவை செய்து கொண்டிருந்த போது 2006, 2007 & 2008 என மூன்று வருடங்கள் அதில் ரஜினி பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி (டிசம்பர் 12) செய்தேன்...

    பின்னர் அவர்கள் பின் தங்கிய நிலையில் ரேடியோ ஹலோ வந்து விட்டார்கள் 24 மணி நேர சேவையுடன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

எங்கே நம் தமிழர் பண்பாடு?

திடீர் ஞானோதயம்