Posts

Showing posts from March, 2012

என் முதல் சிறுகதை

குறை ஒன்றும் இல்லை.....கண்ணா... பதும நாபா...பரம புருஷா...பரம் ஜோதி ஸ்வரூபா.... விதுர வந்த்யா...விமல சரிதா... சுருதி விலகாமல்அந்தக் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதுளாவின் மனதெல்லாம் அவள் தாயார் சொன்ன வார்த்தைகளிலேயே ஒலித்துக் கொண்டிருந்த்து... ” எத்தனை வாட்டி அதையே திருப்பி திருப்பிச் சொல்றது? நீ கண்டிப்பா இந்த தடவை அந்த டி.வில வர பாட்டுப் போட்டில கலந்துக்கத் தான் வேண்டும்,அதில முத பரிசு வாங்கி எனக்கு அந்த ஃப்ளாட் வாங்கிக் கொடுக்கணும்.உன் கிட்ட பாட்டு கத்துண்ட அந்த நீத்துக் குட்டி இப்ப ஜுனியர் சீசன்ல எப்படி ஜம்முன்னு பாடுறா...... பார்த்தியோ?நான் அவ அம்மாகிட்ட கூடக் கேட்டுட்டேன்,உன் கிட்ட இருக்கிற திறமைக்கு நீ அங்கே போனேன்னா   நோக்குத் தான் முத பரிசு நிச்சயம்கிறா... நீ என்னடான்னா இந்தப் பாழாப் போன கர்னாடக சங்கீத்தை விட்டுட்டு வேற பாட்டு எதையுமே பாட மாட்டேன்ற...அப்புறம் எப்படி நாலு காசு பார்க்கிறது?போறாத்துக்கு இப்ப லேட்டஸ்டா குத்துப் பாடல்கள் எல்லாம் கொடுக்கிற அந்த ஃபேமஸ் இசையமைப்பாளரோட இசைல பாட வேற சான்ஸாம்டீ.....பிழைச்சுக்த் தெரிஞ்சிக்கோ...உங்க