Posts

Showing posts from 2011

என்று தணியும் என் இசையின் தாகம்?

Image
 நானும் ஏ.ஆர்.ரகுமானும்: சிறிய வயதில் இருந்தே இளையராஜாவின் தீவிர ரசிகையான  நான் ஏ.ஆர்.ரகுமானின் விசிறியானதில் பெரிய ஆச்சரியம் எதுவுமில்லை.அவரைப் போலவே இசையுலகில் ஒரு பெரிய சகாப்ததைப் பதிக்க வந்த ரகுமானின் இசை எனக்கு முதலில் ஒரு சிறிய வித்தியாசத்தையும்  நிறைய புத்துணர்ச்சியையும் கொடுத்தது. என் வாழ்வில் நான் சந்திக்க விரும்பிய சில பிரபலங்கள். இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கமல்ஹாசன்.இதில்  என்னவென்றால் நான் காணும் கனவானது பெரும்பாலும் கனவாகவே அமைந்து விடுவது,அதை நான் நனவக்க பெரிய அளவில் முயற்சிகள் செய்யவில்லை.அதிலும் என் வாழ்நாளில் ஒரு முறையாவது எஸ்.பி.பி அவர்களுடன்  இணைந்து ஒரு டூயட் பாடுவது என் கனவாகும்.அதுவே எனது மனம் கவர்ந்த இசையமைப்பாளருடன் என்றால். வாவ். ஒகய்.ஆனால் அதற்கான ஒரு சிறு முயற்சியாக நான் இசை பயின்றதை தவிர வேறெதுவும் செய்யவில்லை. இப்போ நனவிற்க்கு வருவோம் அப்படியெல்லாம் கனவு கண்ட சில காலங்களில் நான் உருப்படியாக செய்தது ஏ.ஆர்.ரகுமானின் எ-மைல் இட் கண்டு பிடித்து மைல் பண்ணியது தான். எல்லாமே கனவாக இல்லாமல் உண்மையில் இவரை சந்திக்க வேண்டும்,இவருடன

எங்கே நம் தமிழர் பண்பாடு?

அமீரகத்தில் வாழும் தமிழர் மட்டுமல்ல இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு நம் தமிழரின் நாகரீகம்,பண்பாடு போன்றவைகள் இல்லாது போனது மிகவும் வருத்தத்துக்குரியது.அதற்காக ஒட்டு மொத்தமாக அனைத்துத் தமிழரையும் நான் குறை சொல்லவில்லை, நான் பார்த்த சில அல்ட்ரா மாடர்ன் தமிழர்கள் (அவர்களை வேறு எப்படி தமிழில் சொல்வதென்று தெரியவில்லை ) பற்றிய ஒரு சிறு தொகுப்புத் தான் இது. இதில் உள்ள சிறு சிறு குறைகளை எல்லாம் தவிர்த்து, நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்,மேலும் இது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதவில்லை,பொதுவாக என் மனதில் படிந்தவை,பிறர் சொல்லிக்கேட்டவைகளை இங்கு கருத்தாகப் பதிவாக்கியிருக்கின்றேன்,இதன் மூலம் யார் மனதாவது புண் பட்டால் தயவு கூர்ந்து என்னை மன்னித்து ஒரு இனிய சினேகிதியாக ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குழந்தை வளர்ப்பு : ஒன்றுமில்லை யாராவது நண்பர்கள் வீட்டுக்குப் போனால் எத்தனை குழந்தைகள் நம்மை வரவேற்கின்றன?எப்போ மம்மி உன் ஃப்ரண்டு கிளம்புவாங்க அப்படின்னு நம் காது படவே கேட்கும் பிள்ளைகள் நிறைய உண்டு.அது கூடப் பரவாயில்லை,பெரி

இணைந்திருங்கள் எப்பொழுதும்

 இணைந்திருங்கள் எப்பொழுதும் RADIO HELLO 89.5  இது ரேடியோ ஹலோவின் நிகழ்ச்சி நிரல்   5 - 7 ,காபி கனெக்‌ஷன் -சுபாஷினி -மிகவும் இனிமையான குரல் .காலைப் பொழுதை மிக அழகாக துவங்கி வைக்கிறார்.   7-10 சலாம் கலக்கலாம்- கலக்கல் நிகழ்ச்சி with கிருஷ் & ரேவா ரொம்ப நல்லாருக்கு,traffic updates மற்றும் பல சுவரசியமான தகவல்கள்   10-12 கமர்கட்   - கெளஷியுடன் ஒரு சுவாரசியமான அரட்டை- அரட்டை அடிக்க கெளஷிக்குச் சொல்லிக் குடுக்கவா வேண்டும்?  நல்லாருக்கு ,   12-2   மதியம் மூன் ஷோ-குமுதா  -தெரியாத பல விஷயங்களைப் பற்றி சொல்கிறார்.   2-4  அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்-அனைவரும் -கலகலப்பான ஒரு ஜாலியான குடியிருப்பு இது.   4-5 ஹலோ ஜுக் பாக்ஸ்-ஷாலினி- நேரடியாக தொலைபேசியில்  அழைக்கலாம்   5-7 ஹலோ மாலை- சுரேஷ் -பிரபலங்களை நம் வீட்டு வரவேற்பறைக்கு அழைத்து வருகிறார் இவர்.   7-9 லாவண்யாவின் நிகழ்ச்சி -மிகவும் துடி துடிப்புடன் அழகாக பேசுகிறார் ஆனால் மன்னிக்கவும் லாவண்யா உங்களது துடிப்பான பேச்சில் என்னை மறந்த நான் உங்கள் நிகழ்சி பேரை கவனிக்க மறந்து விட்டேன்.   9-11 டைரி-மாயா -மிகவும் அழகாக ஒவ்வொருவர் நடைமுறை

ஹலோ FM 89.5 உங்களுடன் எப்பொழுதும் (Hello FM 89.5)

வெற்றிக்கொடி கட்டிக் கொண்டு நம் காற்றலைகளில் மிதந்து வருகிறது,ரேடியோ  ஹலோ  F M 89.5. இது வரை கார்களில் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த வானொலி இதோ நாளை முதல் மிகவும் துல்லியமாகத் தெளிவாக நம் வீட்டு ஹாலில் கூட  ஒலிக்கப்  போகிற து. வெறும் பாடல்கள் மட்டுமே இத்தனை நாட்களாக வந்து கொண்டிருக்க , எப்பொழுது தான் இதன் துவக்கம்? என்று தமிழர்களின் ஏக்கத்தைத் தூண்டி விட்டு ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் நாளை முதல் அறிவிப்பாளர்களின் குரலோடு தொடர்ந்து 24 மணி நேரமும் நம்முடன் இணைந்து இருக்கப் போகின்றது ஹலோ FM 89.5.இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒன்றல்ல ரெண்டல்ல 895 தங்க நாணயங்கள் பரிசாகவும் கிடைக்கப் போகிறது. 89.5 FM –ன் எண் வரிசைக்கேற்ப பரிசும் அமைந்து இருக்கிறது . இது நாள் வரை வளைகுடா நாடுகளில் எந்த ஒரு தமிழ் பண்பலையும் 24 மணி நேர சேவை செய்த்தில்லை.முதன் முதலாக ஒலிக்கும் ஹலோவிற்கு இந்த ரசிகர்களின் ஹலோ.அமீரகத்தில் உங்களின் ஒலிச்சேவை தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்.

திடீர் ஞானோதயம்

முதன் முதலாக அமீரகம் வந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகு தமிழில் எழுத வேண்டுமென்ற ஒரு ஆர்வம்,முனைப்பு வந்துள்ளது.ஏன் இந்த மாற்றம்?ஒரு வேளை எனது இரு வில்லுப்பாட்டுக்களும் துபாய் மக்களிடையே ஒரு வரவேற்பைப் பெற்றதனாலேயோ என்னமோ எனக்கும் எழுத ஆர்வம் வந்து விட்டது போல.ஊக்குவித்த அன்புத்தோழி ஜெசீலாவிற்கும் எனது நன்றிகள். சரி எதைப் பற்றி எழுதுவது?.எவ்வளவோ பண்ணிட்டோம்,இதை பண்ண மாட்டோமா?இருங்க யோசிக்கிறேன். எதைப் பற்றினு யோசித்தேன்,யோசிக்கின்றேன்,இன்னமும் யோசித்துக் கொண்டு தாங்க இருக்கேன். ஆனா விஷயம் கிடைச்சாத் தானே எழுதணும்?இப்பத் தாங்க புரிஞ்சுது,எழுதணும் என்ற ஆவல் இருந்தா மட்டும் போதாது கொஞ்சமாச்சும் நாட்டு நடப்பு பற்றி தெரிஞ்சிருக்கணுமென்று. இதைப் பற்றி அப்பவே என் கணவர் அலுத்துக் கொண்டது இப்போ தான் என் மரமண்டைக்குள் ஏறி இருக்கு.அதனால முதல்ல நான் நிறைய படிக்கிறேன் அப்புறமா எழுதறேன்.என்ன நான் சொல்றது சரி தானே? எந்த ஒரு விஷயமும் சொல்லணுமின்னா முதல்ல அதைப் பற்றி அலசணும்,ஆராயணும்,நாம சொல்ற விஷயம் சரியானதா,அது ஒழுங்கா மக்களைப் போய்ச் சேருதானு தான் பார்க்கணும்.அதை தான் வள்ளுவன் கூட சொல்லியிருக்கா