Posts

Bigg Boss Lessons

பிக்பாஸ்அனைவராலும் இன்று பரபரப்பாகப் பேசப் படுகின்ற ஒரு ரியாலிட்டி ஷோ . அதில் பங்கு பெறும் அனைத்து கண்டெஸ்டெண்ட்கள் (Contestants)அனைவரைப் பற்றியும் நாம் போற்றியும் ,தூற்றியும் பல மீம்ஸ்களையும் ,ஸ்டேட்டஸ்களையும் போட்டுக் கொண்டிருக்கோம். இதில் சில பேருக்கு இது ஒரு reality show-ஆ அல்லது scripted show -ஆ என்று ஒரே குழப்பம்,எனக்குக் கிடைக்கும் அரிய நேரத்திலும் இதனை விடாமல் 30 நாட்களாகப் பார்த்து வருவதே உங்களில் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்,நமது  வாழ்க்கையில் இந்த ஷோ ஒரு பாடமாக அமையுமென்பதே முக்கியக்காரணமாகும்..,,இதனை நான் விடாது பார்ப்பதற்கு இன்னுமொரு வலுவான காரணம் 2001-ல் நான் லண்டனில் இருந்த பொழுது பார்த்த பிக்பிரதரின் பாதிப்பேயாகும். பல நாட்களாக எழுதாமல் இருந்த என்னைத் தட்டி எழுப்பியதே இந்த பிக்பாஸ் தான்,அதனால் முதலில் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நன்றியைக் கூறிக் கொள்கின்றேன். சிலபேருக்குத் தோன்றிய சந்தேகங்கள் சர்ச்சையாக மாறும் பொழுது இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வரும் ஒரு ரசிகையாக நான் எழுதுகின்றேன். அனைவருக்கும் திடீரெனத் தோன்றிய அந்த சந்தேகம் காயத்திரியை நல்லவராகக்

மனிதர்கள்

தடம் மாறும் மனிதர்கள்: நேற்று வரை என்னமோ நீ தான் எல்லாமென்று சரணடந்தவர்கள் , எல்லாவற்றையும் கலந்தாலோசித்தவர்கள் இன்று பாராமுகமாக இருப்பார்களாயின் அவர்கள் எண்ணி வந்த காரியம் முடிவடைந்து விட்டதென்று அர்த்தம்.. ஆதலால் பேதைப் பெண்ணே! பழங்கதைகளை நினைத்து வருந்தாதே! உனக்கும் காலம் வரும்.....அன்று ஆனால் இன்று ஒதுக்கப்பட்டதை என்றும் மறவாதே!

மெல்லத் தமிழினி சாகுமோ?தொடங்குங்கள் உங்கள் யுத்தத்தை.

Image
தமிழும் நானும்: சமீபத்தில்  துபாய் தமிழ் சங்கத்தில் நடந்த பொங்கல் சிறப்பு விழாவில்,தமிழில் எழுதப் படிக்க இலவசமாக வகுப்புக்கள்  எடுப்பதைப் பாராட்டி மலர்க்கொத்துக் கொடுத்து கொளரவித்தார்கள்.முதலில் வரவேற்பு உரையில் செயலாளர் திரு ஜெகன்னாதன் அவர்களும், நிகழ்ச்சியின் இறுதியில் உயர் திரு.தாஹா அவர்களும் என்னைப் பாராட்டிப் பேசியது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அது மட்டுமல்லாமல் இந்த ஊரில்(துபாய்) வந்து ஒரு தமிழராக இருந்து பல பேருக்கு வேலை கொடுக்கும் ஒரு பெரிய முன்னணித் தொழிலதிபராகவும், அனைத்துத்  தமிழ் மக்களுக்கும்  சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கும் மதிப்பிற்குரிய உயர்.திரு .ஐயா சையது சலாவுதீன் (ETA-Managing Director)அவர்களின் கையினால் மலர்க்கொத்தினைப் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்று தமிழில் இலவசமாக வகுப்புக்கள் எடுக்க  நான்ஆரம்பித்தது திடீரென்று ஒரு நாளில் தொடங்கப் பட்டதில்லை.வெகு நாட்களாக என் மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு ஆதங்கமே ஆகும். பொதுவாக என் மனதில் தோன்றிய ஒரு சில கேள்விகளின் வெளிப்பாடே ஆகும்.  அக்கேள்விகளை  நீங்களும் சிந்திப்பீர்களாயின் தமிழ் என்றென்றும் அழியாது.

பெண்ணியம்-சென்ற வருடம் நான் எழுதிய ஒரு கட்டுரை

பெண்ணியம் ” பெண்ணியம் ” –கேட்பதற்கு சுலபமான வார்த்தையாகத் தெரியலாம், ஆனால் இன்னது தான் ” பெண்ணியம் ” என்று யாராலும் இன்னமும் வரையறுக்கப் பட முடியாத விஷயம்,எனக்கு சரி என்று தோன்றுவது இன்னொருவரின் பார்வையில் தவறாகவும் தோன்றலாம்,என்னைப் பொறுத்த வரை ” பெண்ணியம் ” என்றால் என்ன என்று இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..                                                           ” பெண்ணியம் ” என்றால் என்ன? பெண்ணியமென்றால் என்னவென்று ஒரு பெண்ணியவாதியிடம் கேட்டேன். ஒரு ஆண் என்னவெல்லாம் செய்கின்றானோ அத்தனையையும் ஒரு பெண்ணாலும் செய்ய முடியுமென்பதைக் கூறுவதே பெண்ணியமென்று சொன்னார். சரி ஒரு இல்லத்தரசியிடம் கேட்கலாமென்றெண்ணிக் கேட்டேன். ஏதோ கேட்கக்கூடாத ஒரு கெட்ட வார்த்தையைக் கேட்ட மாதிரி என்னை முறைத்துப் பார்த்தார்.என்ன செய்வதென்று யோசித்து விட்டு நானே களமிறங்கி ஆய்வு செய்து பார்த்த போது “பெண்ணியம் ” என்றால் என்னவென்று புலப்பட்டது. “ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடாத்த வந்தோம்.. எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி.... ”

கீதையின் சாரம் என் வாழ்வில்

சில சமயம் நான் சில விஷயங்களை எதிர்பார்த்து ஏமாந்ததுண்டு...ஆனால் திடீரென்று கிடைத்த இன்ப அதிர்ச்சி ஸ்ருதிலயா ப்ரதிபாவின் பாராட்டு விழா,மாபெரும் இசை மேதை டி.வி.ஜி முன்பு எனக்குக் கிடைத்த பாராட்டும்,பரிசளிப்பும் என்னை ஒரு விஷயத்தை உணர வைத்தது....அது பகவத்கீதையின் முக்கிய வரிகள்..... "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்." அதனால் நண்பர்களே எது நமக்குக் கிடைக்கணுமென்று இருக்கோ அது தானே நம்மைத் தேடி வரும்.. நாம் தேடிப் போனால் அதற்கு மரியாதையே இல்லை...So Do you work sincerely without expectation...And wait for you turn....

என் முதல் சிறுகதை

குறை ஒன்றும் இல்லை.....கண்ணா... பதும நாபா...பரம புருஷா...பரம் ஜோதி ஸ்வரூபா.... விதுர வந்த்யா...விமல சரிதா... சுருதி விலகாமல்அந்தக் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதுளாவின் மனதெல்லாம் அவள் தாயார் சொன்ன வார்த்தைகளிலேயே ஒலித்துக் கொண்டிருந்த்து... ” எத்தனை வாட்டி அதையே திருப்பி திருப்பிச் சொல்றது? நீ கண்டிப்பா இந்த தடவை அந்த டி.வில வர பாட்டுப் போட்டில கலந்துக்கத் தான் வேண்டும்,அதில முத பரிசு வாங்கி எனக்கு அந்த ஃப்ளாட் வாங்கிக் கொடுக்கணும்.உன் கிட்ட பாட்டு கத்துண்ட அந்த நீத்துக் குட்டி இப்ப ஜுனியர் சீசன்ல எப்படி ஜம்முன்னு பாடுறா...... பார்த்தியோ?நான் அவ அம்மாகிட்ட கூடக் கேட்டுட்டேன்,உன் கிட்ட இருக்கிற திறமைக்கு நீ அங்கே போனேன்னா   நோக்குத் தான் முத பரிசு நிச்சயம்கிறா... நீ என்னடான்னா இந்தப் பாழாப் போன கர்னாடக சங்கீத்தை விட்டுட்டு வேற பாட்டு எதையுமே பாட மாட்டேன்ற...அப்புறம் எப்படி நாலு காசு பார்க்கிறது?போறாத்துக்கு இப்ப லேட்டஸ்டா குத்துப் பாடல்கள் எல்லாம் கொடுக்கிற அந்த ஃபேமஸ் இசையமைப்பாளரோட இசைல பாட வேற சான்ஸாம்டீ.....பிழைச்சுக்த் தெரிஞ்சிக்கோ...உங்க