திடீர் ஞானோதயம்

முதன் முதலாக அமீரகம் வந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகு தமிழில் எழுத வேண்டுமென்ற ஒரு ஆர்வம்,முனைப்பு வந்துள்ளது.ஏன் இந்த மாற்றம்?ஒரு வேளை எனது இரு வில்லுப்பாட்டுக்களும் துபாய் மக்களிடையே ஒரு வரவேற்பைப் பெற்றதனாலேயோ என்னமோ எனக்கும் எழுத ஆர்வம் வந்து விட்டது போல.ஊக்குவித்த அன்புத்தோழி ஜெசீலாவிற்கும் எனது நன்றிகள்.

சரி எதைப் பற்றி எழுதுவது?.எவ்வளவோ பண்ணிட்டோம்,இதை பண்ண மாட்டோமா?இருங்க யோசிக்கிறேன்.எதைப் பற்றினு யோசித்தேன்,யோசிக்கின்றேன்,இன்னமும் யோசித்துக் கொண்டு தாங்க இருக்கேன்.

ஆனா விஷயம் கிடைச்சாத் தானே எழுதணும்?இப்பத் தாங்க புரிஞ்சுது,எழுதணும் என்ற ஆவல் இருந்தா மட்டும் போதாது கொஞ்சமாச்சும் நாட்டு நடப்பு பற்றி தெரிஞ்சிருக்கணுமென்று. இதைப் பற்றி அப்பவே என் கணவர் அலுத்துக் கொண்டது இப்போ தான் என் மரமண்டைக்குள் ஏறி இருக்கு.அதனால முதல்ல நான் நிறைய படிக்கிறேன் அப்புறமா எழுதறேன்.என்ன நான் சொல்றது சரி தானே?

எந்த ஒரு விஷயமும் சொல்லணுமின்னா முதல்ல அதைப் பற்றி அலசணும்,ஆராயணும்,நாம சொல்ற விஷயம் சரியானதா,அது ஒழுங்கா மக்களைப் போய்ச் சேருதானு தான் பார்க்கணும்.அதை தான் வள்ளுவன் கூட சொல்லியிருக்கார்,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
so நான் சொல்றேனேனு கேக்காதீங்க, நீங்களே படிச்சு ஆராய்ந்து முடிவெடுங்க.
ஆஹா விஷயமே இல்லாம இவ்ளோ நேரமா நான் எழுதின இந்த Blog –ஐ படித்ததுக்கு மிக்க நன்றி.மீண்டும் சந்திப்போம் (கண்டிப்பாக அடுத்த தடவை உருப்படியாக எழுதறேன்).

Comments

  1. Super akka.. good one to start with.. முன்னுரைக்கு இது போதும்... இன்னொரு விசயம், நாம ரொம்ப அலசி ஆராயணும்னு கூட இல்ல, நம்மளோட பார்வை / விமர்சனமாகக் கூட அது இருக்கலாம்.. so next time, உங்கள்ட்ட இருந்து ரொம்ப எதிர்பாக்குறேன்.

    ReplyDelete
  2. Hi Renuka,

    Good start. Write more and connect yourself in Thamizmanam to get more visits to your blog.

    ReplyDelete
  3. My heartiest wishes Renuka...

    Keep writing more and more good articles...

    Feel free to visit my blogspots and read the articles posted there... You can read variety of articles there...

    www.jokkiri.blogspot.com

    www.edakumadaku.blogspot.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

எங்கே நம் தமிழர் பண்பாடு?