Posts

Showing posts from 2012

கீதையின் சாரம் என் வாழ்வில்

சில சமயம் நான் சில விஷயங்களை எதிர்பார்த்து ஏமாந்ததுண்டு...ஆனால் திடீரென்று கிடைத்த இன்ப அதிர்ச்சி ஸ்ருதிலயா ப்ரதிபாவின் பாராட்டு விழா,மாபெரும் இசை மேதை டி.வி.ஜி முன்பு எனக்குக் கிடைத்த பாராட்டும்,பரிசளிப்பும் என்னை ஒரு விஷயத்தை உணர வைத்தது....அது பகவத்கீதையின் முக்கிய வரிகள்..... "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்." அதனால் நண்பர்களே எது நமக்குக் கிடைக்கணுமென்று இருக்கோ அது தானே நம்மைத் தேடி வரும்.. நாம் தேடிப் போனால் அதற்கு மரியாதையே இல்லை...So Do you work sincerely without expectation...And wait for you turn....

என் முதல் சிறுகதை

குறை ஒன்றும் இல்லை.....கண்ணா... பதும நாபா...பரம புருஷா...பரம் ஜோதி ஸ்வரூபா.... விதுர வந்த்யா...விமல சரிதா... சுருதி விலகாமல்அந்தக் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதுளாவின் மனதெல்லாம் அவள் தாயார் சொன்ன வார்த்தைகளிலேயே ஒலித்துக் கொண்டிருந்த்து... ” எத்தனை வாட்டி அதையே திருப்பி திருப்பிச் சொல்றது? நீ கண்டிப்பா இந்த தடவை அந்த டி.வில வர பாட்டுப் போட்டில கலந்துக்கத் தான் வேண்டும்,அதில முத பரிசு வாங்கி எனக்கு அந்த ஃப்ளாட் வாங்கிக் கொடுக்கணும்.உன் கிட்ட பாட்டு கத்துண்ட அந்த நீத்துக் குட்டி இப்ப ஜுனியர் சீசன்ல எப்படி ஜம்முன்னு பாடுறா...... பார்த்தியோ?நான் அவ அம்மாகிட்ட கூடக் கேட்டுட்டேன்,உன் கிட்ட இருக்கிற திறமைக்கு நீ அங்கே போனேன்னா   நோக்குத் தான் முத பரிசு நிச்சயம்கிறா... நீ என்னடான்னா இந்தப் பாழாப் போன கர்னாடக சங்கீத்தை விட்டுட்டு வேற பாட்டு எதையுமே பாட மாட்டேன்ற...அப்புறம் எப்படி நாலு காசு பார்க்கிறது?போறாத்துக்கு இப்ப லேட்டஸ்டா குத்துப் பாடல்கள் எல்லாம் கொடுக்கிற அந்த ஃபேமஸ் இசையமைப்பாளரோட இசைல பாட வேற சான்ஸாம்டீ.....பிழைச்சுக்த் தெரிஞ்சிக்கோ...உங்க

எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்?

Image
எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் ? வெகு நாட்களாக நான் எழுதாமல் இருந்தேன்,ஆனால் என் எழுத்தையும் விரும்பிப் படிக்கும் சிலர் மற்றும் பலர்.....???  (என்ன கொடுமை சார் இது??) விரும்பிக் கேட்ட காரணத்தால் இன்று இந்த கட்டுரையை எழுதலாமென நினைத்தேன். எதைப் பற்றி எழுதலாமென எண்ணும் போது என் கண்ணில் பட்டது தான் இந்தப் புரட்சித் திருமணம்...(கடவுளே...இது ஏன் என் கண்ணில் பட்டதோ????)முக நூலில் பரிமாறியிருக்கும் அன்பரின் கலைச் சேவை தொடரட்டும்......என்ன ஒரு பண்பாடு...ஆஹா அருமையோ அருமை.... திருமண நாளன்று மணப்பெண் ஆடிக் கொண்டே மண மேடைக்கு வருவாராம்...உடன் தோழியர் மட்டுமின்றி அம்மையாரின் தந்தை மற்றும் சில ஆண் நண்பர்களோ,உறவினர்களோ அல்லது சகோதரர்களோ...அவர்கள் யாரோ..ஆனால் பார்க்கும் போது மணப்பெண் ஒரு சில ஆண்களுடன் இணைந்து ஆடுவது போலத் தானே தோன்றுவது..அதுவும் திருமணத்தன்றே ஆடி இருப்பது தான் வேடிக்கை....... இவர்கள் ஏனிப்படி நடந்து கொள்கிறார்கள்?திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்கு..அதை ஏன் கேலிக்கூத்தாக மாற்ற வேண்டும்? வேண்டுமென்றால் அதற்கென்று இருக்கும் இரவு நேர ஆட்ட விடுதிகள