Posts

Showing posts from 2013

மனிதர்கள்

தடம் மாறும் மனிதர்கள்: நேற்று வரை என்னமோ நீ தான் எல்லாமென்று சரணடந்தவர்கள் , எல்லாவற்றையும் கலந்தாலோசித்தவர்கள் இன்று பாராமுகமாக இருப்பார்களாயின் அவர்கள் எண்ணி வந்த காரியம் முடிவடைந்து விட்டதென்று அர்த்தம்.. ஆதலால் பேதைப் பெண்ணே! பழங்கதைகளை நினைத்து வருந்தாதே! உனக்கும் காலம் வரும்.....அன்று ஆனால் இன்று ஒதுக்கப்பட்டதை என்றும் மறவாதே!

மெல்லத் தமிழினி சாகுமோ?தொடங்குங்கள் உங்கள் யுத்தத்தை.

Image
தமிழும் நானும்: சமீபத்தில்  துபாய் தமிழ் சங்கத்தில் நடந்த பொங்கல் சிறப்பு விழாவில்,தமிழில் எழுதப் படிக்க இலவசமாக வகுப்புக்கள்  எடுப்பதைப் பாராட்டி மலர்க்கொத்துக் கொடுத்து கொளரவித்தார்கள்.முதலில் வரவேற்பு உரையில் செயலாளர் திரு ஜெகன்னாதன் அவர்களும், நிகழ்ச்சியின் இறுதியில் உயர் திரு.தாஹா அவர்களும் என்னைப் பாராட்டிப் பேசியது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அது மட்டுமல்லாமல் இந்த ஊரில்(துபாய்) வந்து ஒரு தமிழராக இருந்து பல பேருக்கு வேலை கொடுக்கும் ஒரு பெரிய முன்னணித் தொழிலதிபராகவும், அனைத்துத்  தமிழ் மக்களுக்கும்  சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கும் மதிப்பிற்குரிய உயர்.திரு .ஐயா சையது சலாவுதீன் (ETA-Managing Director)அவர்களின் கையினால் மலர்க்கொத்தினைப் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்று தமிழில் இலவசமாக வகுப்புக்கள் எடுக்க  நான்ஆரம்பித்தது திடீரென்று ஒரு நாளில் தொடங்கப் பட்டதில்லை.வெகு நாட்களாக என் மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு ஆதங்கமே ஆகும். பொதுவாக என் மனதில் தோன்றிய ஒரு சில கேள்விகளின் வெளிப்பாடே ஆகும்.  அக்கேள்விகளை  நீங்களும் சிந்திப்பீர்களாயின் தமிழ் என்றென்றும் அழியாது.

பெண்ணியம்-சென்ற வருடம் நான் எழுதிய ஒரு கட்டுரை

பெண்ணியம் ” பெண்ணியம் ” –கேட்பதற்கு சுலபமான வார்த்தையாகத் தெரியலாம், ஆனால் இன்னது தான் ” பெண்ணியம் ” என்று யாராலும் இன்னமும் வரையறுக்கப் பட முடியாத விஷயம்,எனக்கு சரி என்று தோன்றுவது இன்னொருவரின் பார்வையில் தவறாகவும் தோன்றலாம்,என்னைப் பொறுத்த வரை ” பெண்ணியம் ” என்றால் என்ன என்று இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..                                                           ” பெண்ணியம் ” என்றால் என்ன? பெண்ணியமென்றால் என்னவென்று ஒரு பெண்ணியவாதியிடம் கேட்டேன். ஒரு ஆண் என்னவெல்லாம் செய்கின்றானோ அத்தனையையும் ஒரு பெண்ணாலும் செய்ய முடியுமென்பதைக் கூறுவதே பெண்ணியமென்று சொன்னார். சரி ஒரு இல்லத்தரசியிடம் கேட்கலாமென்றெண்ணிக் கேட்டேன். ஏதோ கேட்கக்கூடாத ஒரு கெட்ட வார்த்தையைக் கேட்ட மாதிரி என்னை முறைத்துப் பார்த்தார்.என்ன செய்வதென்று யோசித்து விட்டு நானே களமிறங்கி ஆய்வு செய்து பார்த்த போது “பெண்ணியம் ” என்றால் என்னவென்று புலப்பட்டது. “ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடாத்த வந்தோம்.. எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி.... ”