Posts

Showing posts from October, 2011

எங்கே நம் தமிழர் பண்பாடு?

அமீரகத்தில் வாழும் தமிழர் மட்டுமல்ல இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு நம் தமிழரின் நாகரீகம்,பண்பாடு போன்றவைகள் இல்லாது போனது மிகவும் வருத்தத்துக்குரியது.அதற்காக ஒட்டு மொத்தமாக அனைத்துத் தமிழரையும் நான் குறை சொல்லவில்லை, நான் பார்த்த சில அல்ட்ரா மாடர்ன் தமிழர்கள் (அவர்களை வேறு எப்படி தமிழில் சொல்வதென்று தெரியவில்லை ) பற்றிய ஒரு சிறு தொகுப்புத் தான் இது. இதில் உள்ள சிறு சிறு குறைகளை எல்லாம் தவிர்த்து, நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்,மேலும் இது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதவில்லை,பொதுவாக என் மனதில் படிந்தவை,பிறர் சொல்லிக்கேட்டவைகளை இங்கு கருத்தாகப் பதிவாக்கியிருக்கின்றேன்,இதன் மூலம் யார் மனதாவது புண் பட்டால் தயவு கூர்ந்து என்னை மன்னித்து ஒரு இனிய சினேகிதியாக ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குழந்தை வளர்ப்பு : ஒன்றுமில்லை யாராவது நண்பர்கள் வீட்டுக்குப் போனால் எத்தனை குழந்தைகள் நம்மை வரவேற்கின்றன?எப்போ மம்மி உன் ஃப்ரண்டு கிளம்புவாங்க அப்படின்னு நம் காது படவே கேட்கும் பிள்ளைகள் நிறைய உண்டு.அது கூடப் பரவாயில்லை,பெரி