என்று தணியும் என் இசையின் தாகம்?

 நானும் ஏ.ஆர்.ரகுமானும்:

சிறிய வயதில் இருந்தே இளையராஜாவின் தீவிர ரசிகையான  நான் ஏ.ஆர்.ரகுமானின் விசிறியானதில் பெரிய ஆச்சரியம் எதுவுமில்லை.அவரைப் போலவே இசையுலகில் ஒரு பெரிய சகாப்ததைப் பதிக்க வந்த ரகுமானின் இசை எனக்கு முதலில் ஒரு சிறிய வித்தியாசத்தையும்  நிறைய புத்துணர்ச்சியையும் கொடுத்தது.

என் வாழ்வில் நான் சந்திக்க விரும்பிய சில பிரபலங்கள். இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கமல்ஹாசன்.இதில்  என்னவென்றால் நான் காணும் கனவானது பெரும்பாலும் கனவாகவே அமைந்து விடுவது,அதை நான் நனவக்க பெரிய அளவில் முயற்சிகள் செய்யவில்லை.அதிலும் என் வாழ்நாளில் ஒரு முறையாவது எஸ்.பி.பி அவர்களுடன்  இணைந்து ஒரு டூயட் பாடுவது என் கனவாகும்.அதுவே எனது மனம் கவர்ந்த இசையமைப்பாளருடன் என்றால். வாவ். ஒகய்.ஆனால் அதற்கான ஒரு சிறு முயற்சியாக நான் இசை பயின்றதை தவிர வேறெதுவும் செய்யவில்லை.

இப்போ நனவிற்க்கு வருவோம் அப்படியெல்லாம் கனவு கண்ட சில காலங்களில் நான் உருப்படியாக செய்தது ஏ.ஆர்.ரகுமானின் எ-மைல் இட் கண்டு பிடித்து மைல் பண்ணியது தான்.

எல்லாமே கனவாக இல்லாமல் உண்மையில் இவரை சந்திக்க வேண்டும்,இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று நான் விரும்பியதும் திரு.ஏ.ஆர்.ரகுமானுடன் தான்.

திருச்சியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலதில் முதன் முதலாக என் செவிகளில் கேட்ட ஒரு வித்தியாசமான இசை காதல் ரோஜாவே பாடல் தான்.இன்னமும் மறக்க முடியாத பாடல்,அதுவும் பாடல் துவக்கத்தில் சுஜாதா பாடும் ஹம்மிங்.அதை இப்பொழுது நினைத்தால் கூடப் புல்லரிக்கிறது.டெக்னிக்கலாக அவர் பண்ணிய விதம் தமிழிசையில் அப்பொழுது ஒரு புது முயற்சி.

என்ன இசை இது?என்ன வகையான தொழில் நுட்பம்?எப்படி இந்த பாடல் மட்டும் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறதென நான் பல வகைகளில் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பேன்.

பின்னர் பதினொராவது வகுப்புப் படிக்கும் போது சென்னை வந்து சேர்ந்தோம்.அப்பொழுது தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் இசையில் பாடும் வாய்ப்பு வந்தது.மிகவும் அசட்டுத் தனமாக பாடினால் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தான் பாடுவேன் என்று மறுத்தும் இருக்கின்றேன்.இப்பொழுது நினைத்துப் பார்தால்,அப்பவே பாடி இருந்தால் ஏ/ஆர் ஆரின் அறிமுகம் கிடைத்து அவர் இசையிலும் கூடப் பாடி இருக்கலாம். நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

பழைய கதைகள் பல இருந்தாலும் 2003 ல் அவரை சந்தித்த போது ஆஹா அவருடன் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்று மனது வருந்தியுள்ளேன்.அக்கனவை நனவாக்க சென்ற வருடம் ஆஸ்கர் தமிழன் வந்த போது அவரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.அது போல அவரின் இசையில் என்னால் இது வரை பாடாத கனவு நிறைவேறா விடினும் என் மாணவ மாணவியரோ அல்லது என் குழந்தைகளோ கண்டிப்பாக அவருடன் பணியாற்றுவார்கள் என்பது என் அசாத்திய நம்பிக்கை...

யார் அதை நிறைவேற்றப்போகின்றார்களோ?என்று தணியும் என் இந்த இசையின் தாகம்?



 பொன்னான சில வினாடிகள்




Comments

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

எங்கே நம் தமிழர் பண்பாடு?

திடீர் ஞானோதயம்