Bigg Boss Lessons

பிக்பாஸ்அனைவராலும் இன்று பரபரப்பாகப் பேசப் படுகின்ற ஒரு ரியாலிட்டி ஷோ .
அதில் பங்கு பெறும் அனைத்து கண்டெஸ்டெண்ட்கள் (Contestants)அனைவரைப் பற்றியும் நாம் போற்றியும் ,தூற்றியும் பல மீம்ஸ்களையும் ,ஸ்டேட்டஸ்களையும் போட்டுக் கொண்டிருக்கோம்.

இதில் சில பேருக்கு இது ஒரு reality show-ஆ அல்லது scripted show -ஆ என்று ஒரே குழப்பம்,எனக்குக் கிடைக்கும் அரிய நேரத்திலும் இதனை விடாமல் 30 நாட்களாகப் பார்த்து வருவதே உங்களில் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்,நமது  வாழ்க்கையில் இந்த ஷோ ஒரு பாடமாக அமையுமென்பதே முக்கியக்காரணமாகும்..,,இதனை நான் விடாது பார்ப்பதற்கு இன்னுமொரு வலுவான காரணம் 2001-ல் நான் லண்டனில் இருந்த பொழுது பார்த்த பிக்பிரதரின் பாதிப்பேயாகும்.

பல நாட்களாக எழுதாமல் இருந்த என்னைத் தட்டி எழுப்பியதே இந்த பிக்பாஸ் தான்,அதனால் முதலில் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நன்றியைக் கூறிக் கொள்கின்றேன். சிலபேருக்குத் தோன்றிய சந்தேகங்கள் சர்ச்சையாக மாறும் பொழுது இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வரும் ஒரு ரசிகையாக நான் எழுதுகின்றேன். அனைவருக்கும் திடீரெனத் தோன்றிய அந்த சந்தேகம் காயத்திரியை நல்லவராகக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்ற ஒரு கூற்றுத்தான்,மேலும் கமல் சதி செய்து விட்டார் என்றும் அவரைத் தட்டிக் கேட்கவில்லையென்பதும் தான்,,
அனைவருக்கும் ஒரு விஷயம் தெளிவு படுத்த விரும்புகின்றேன்.கமல் ஒரு தொகுப்பாளரே தவிர அவர் ஒன்றும் சதியாளார் அல்ல.


அனைவரயும் நல்லவர்களாக மாற்றுகின்றார்கள் என்பதே சிலரின் கூற்று..இதில் யார் கெட்டவராக இருந்தார்கள்?..ஒரு பெண் என்ற முறையில் இதில் கலந்து கொள்ளும் அனைத்துப் பெண்களுக்கும் ஆதரவாகவே நான் இதனை எழுதுகின்றேன்..வெளியில் வந்த பின்பு அவர்கள் வாழ ஒரு வாழ்க்கையைக் கொடுங்கள். மிகவும் அசிங்கமாகவும்,கொச்சையாகவும் அவர்களை விமர்சிப்பதை இன்றுடன் நிறுத்தலாமே? அவர்களும் மனிதர்களே! இயல்பாய் இருங்கள் என்பதை மனதில் கொண்டு இயல்பாய் இருக்கின்றார்கள்..

அனைவருக்கும் ஓவியாவைப் போல ஒரு ஓவியமாக, தேவதையாக இருக்கத்தான் ஆசை..
ஆனால் நிஜத்தில் நம்மில் எத்தனை ஓவியாக்கள் இருக்கின்றனர்?அப்படி இருந்தாலும் இந்த சமூகத்தினால் மாற்றப் படுகின்றனர்.. 

ஜூலியைப் போல் “யார் நல்லவர் ,யார் கெட்டவரென்று தெரியாமல், அனைவருக்கும் நல்லவராக இருக்க வேண்டுமென்று”நினைத்துப் பல தவறுகளை செய்வபவர்களே நாம் ,உண்மையைச் சொல்லுங்கள் உங்கள் உறவு அடுத்தவருடன் காப்பாற்றப் பட  வேண்டுமென்று நமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கூட நம்மையே அறியாமல் ஒதுக்கி வைத்திருப்பவர்கள் தான் நாம். (இதில் நாம் என்பது என்னையோ வேறு யாரையோ குறிப்பிட்டு எழுதவில்லை,பொதுவான கருத்து )

காயத்திரியைப் போல் முன்கோபத்தினால் யாரிடம் என்ன பேசுகின்றோம் எப்படி நடக்கின்றொம் என்பதறியாமல் அனைவரையும் எடுத்தெறிந்து பேசி அவமானப் படுகின்றவர்கள் கூட நம்மில்  இருக்கின்றனர்கள்,உற்றுப் பாருங்கள் உண்மை புரியும்,அவர்களிடம் ஒரு தாய்மையின் ஈரம் கூட இருக்கும்,ஏன் இந்த காயத்திரி கோவப்படுகின்றார்? அவருக்கு அடுத்தவர் மேல் உள்ள அதீத நம்பிக்கை மற்றும் பாசமும் தான்..

நம்மில் எத்தனை பேர் நமிதா போல இருக்கின்றோம்?அவரைப் பார்க்கும் போது ஒரு வளர்ந்த குழந்தை போல தோன்றியது.அனைவருடனும் சகஜமாக பேசும் குணம் அவரிடம் இல்லாததால் பல சமயங்களில் அவரிடம் மக்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் குறைவாக இருந்தது. மிகவும் நேர்மையாக இருந்தார், யாரும் எதிர்பார்க்காத போது இறங்கி கழிவறையை சுத்தம் செய்தது அனவராலும் மறக்க முடியாதது.அது போல சிலரும் இருக்கின்றனர். சுய மரியாதை, மற்றவர்களிடம் ஒரு டிசிப்பிளின் எதிர்பார்த்து ஏமாந்து போகும் குணத்தால் வெளிப்படாமல் போய் விடுகின்றனர்..

ரைசாவைப் போல் எதுக்கு வம்பு இருக்குமிடத்தில் யாருக்கு அதிக மரியாதை இருக்கின்றதோ அவரை சார்ந்து ,அவரின் கருத்துக்களுடன் ஒத்துப் போய் விட்டால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கின்றவர்களும் நம்மிடையே பலர் இருக்கின்றார்கள்.

ஆர்த்தியைப் போல் நாம் நேர்மையாக இருக்கின்றோமென நினைத்துக் கொண்டு அடுத்தவரிடம் நீங்க ஏன் உங்க நர்ஸ் தொழிலை விட்டு விட்டு வந்தீங்க?ஏன் ஜல்லிக்கட்டுல போராடினீங்க என்று சம்பந்தமேயில்லாமல் வம்பளந்து,வாயாடி பேர் கெட்டுப் போனவர்களும் இருக்கின்றார்கள்,அதற்காக அவரைக் கேடு கெட்ட ஜென்மமென்று திட்டுவதெல்லாம் ரொம்ப அனாவசியம்,அப்புறம் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைப் புதைத்து விட்டு நாம் என்ன சாதிக்கப் போகின்றொம்?அதனால் வசை பாடுவதை நிறுத்தி விட்டு ஒரு நிகழ்ச்சியை,நிகழ்ச்சியாகப் பார்க்கக் கற்றுக் கொள்வோம்.

#Biggbosslessons to be continued……


by Rhenu

Comments

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

எங்கே நம் தமிழர் பண்பாடு?

திடீர் ஞானோதயம்