எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்?


எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்?

வெகு நாட்களாக நான் எழுதாமல் இருந்தேன்,ஆனால் என் எழுத்தையும் விரும்பிப் படிக்கும் சிலர் மற்றும் பலர்.....???  (என்ன கொடுமை சார் இது??)விரும்பிக் கேட்ட காரணத்தால் இன்று இந்த கட்டுரையை எழுதலாமென நினைத்தேன்.
எதைப் பற்றி எழுதலாமென எண்ணும் போது என் கண்ணில் பட்டது தான் இந்தப் புரட்சித் திருமணம்...(கடவுளே...இது ஏன் என் கண்ணில் பட்டதோ????)முக நூலில் பரிமாறியிருக்கும் அன்பரின் கலைச் சேவை தொடரட்டும்......என்ன ஒரு பண்பாடு...ஆஹா அருமையோ அருமை....






திருமண நாளன்று மணப்பெண் ஆடிக் கொண்டே மண மேடைக்கு வருவாராம்...உடன் தோழியர் மட்டுமின்றி அம்மையாரின் தந்தை மற்றும் சில ஆண் நண்பர்களோ,உறவினர்களோ அல்லது சகோதரர்களோ...அவர்கள் யாரோ..ஆனால் பார்க்கும் போது மணப்பெண் ஒரு சில ஆண்களுடன் இணைந்து ஆடுவது போலத் தானே தோன்றுவது..அதுவும் திருமணத்தன்றே ஆடி இருப்பது தான் வேடிக்கை.......
இவர்கள் ஏனிப்படி நடந்து கொள்கிறார்கள்?திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்கு..அதை ஏன் கேலிக்கூத்தாக மாற்ற வேண்டும்? வேண்டுமென்றால் அதற்கென்று இருக்கும் இரவு நேர ஆட்ட விடுதிகளில் (Night clubs)ஆடித் தொலைக்க வேண்டியது தானே?மேலும் அதனை அவர்கள் முக நூல் (Facebook) மற்றும் வண்ணக்குழாய் (Youtube) மூலம் ஏன் வெளியிட வேண்டும்?எல்லாம் தற்கால திரைப்படங்களின் மாயை...அதன் மேல் இருக்கும் மோகம்...வித்தியாசமாய் செய்ய வேண்டுமென்று இவர்கள் இன்னும் என்னென்னவற்றையெல்லாம் மாற்றப் போகின்றார்கள்?இதனை யாரெல்லாம் வரவேற்கின்றீர்கள்?..
சமீபத்தில் அமீரகதில் நடந்த ஒரு விழாவின் போது பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்கள் தனது அனுபவமாக ஒரு விஷயத்தைச் சொல்லி இருந்தார்..அவர் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடத்த ஜெர்மனி நாடு போய் இருந்த போது அங்கே ஒரு அண்ணனும் தங்கையும் இணைந்து “சரக்கு வைச்சிருக்கேன்என்ற விரசமான திரைப்படப் பாடலுக்கு நடனமாடியதாகவும்..பின்னர் தான் அதனைச் சாடிய பின் அவர்களின் தந்தை தன் தவறை உணர்ந்து அவையில் உடனடியாக மன்னிப்புக் கோரியதாகவும் கூறினார்.எதனால் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
நமது திரைப்படங்களை முழுமையாகக் குறை கூற முடியாது..ஏனென்றால் நம் வாழ்வில் நடக்கும் நல்லதையும் கெட்டதையும் கலந்து தானே அவர்கள் திரைப்படமாக எடுக்கின்றார்கள்?அதில் ஏன் நாம் நல்லவற்றைக் கடைப் பிடிக்கக் கூடாது.?..ஆபாசமான பாடல்களும் விரசமான அங்க அசைவுகளையும் மிகவும் சிறிய குழந்தைகள் கூடப் பண்ணும் போது மனது வலிக்கிறது.....
சரி விஷயத்துக்கு வருவோம்.சம்பந்தப் பட்ட இத்திருமணம் குறித்து நான் எனது முக நூலில் ஏற்கனவே சாடி எழுதி இருக்கும் போது ஒரு மலேஷியத் தோழி கூறி இருந்தார்..பரவாயில்லை இவர்கள் தாலி கட்டிக் கொண்டு தானே திருமணம் செய்கின்றனர்?அதனால் அவர்கள் நம் தமிழ் முறைப்படி தானே மணக்கின்றனர்..அவர்கள் திருமணத்தில் அவர்கள் ஆடுவதில் என்ன தவறு என்று கேட்டார்....
என்ன பதில் கூறுவது?ஒரு வேளை மேலும் சில பெண் சிந்தனையாளர்கள் கூட என்னைப் பத்தாம் பசலி என்று கூறலாம்..ஆனால் என்னைப் பொறுத்தவரை திருமணமாகும் பெண்,அதுவும் அந்த மணமேடையில் அனைவரின் முன் நடனம் ஆடுவது மிகவும் தவறு...ஏன் என்றால் மற்றவர்கள் பார்க்கும் போது இவள் அவனுக்குரியவள் அவனுடையவள்..இந்த சகோதரிக்கு திருமணம் நடக்கப் போகின்றது என்ற ஒரு மரியாதை,கண்ணியம் தோன்ற வேண்டும்,..
அதை விடுத்து அந்த பெண்ணின் நடனத்தையோ..அவளையோ பார்ப்பவர்கள் கண்ணில் அப்பெண்ணுக்கோ அவளை மணம் புரிபவருக்கோ என்ன மரியாதை தோன்றும்?தயவு செய்து தமிழ் திரைப்படங்களில் உள்ள நல்ல விஷயங்களைப் பாருங்கள்..வித்தியாசம்...வினோதம் என்று உங்கள் வாழ்க்கையைக் கேலிக்கூத்தாக்கி விடாதீர்கள் சகோதரிகளே.... ..
உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ....
அன்புடன்,
ரேணு..




Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ரேணுகா...

    மாறி வரும் இன்றைய உலகில், கலாச்சாரம் என்பது கேலிக்கூத்தாகவே பலரின் கண்களுக்கு தெரிகிறது... பண்பாடு சிதைத்தல் என்பது அவர்களுக்கு பொழுதுபோக்காகவே இருக்கிறது...

    அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இதெல்லாம் இன்றைய பெண்களுக்கு படிப்பிக்கப்படவே இல்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது...

    பெண் என்பவள் அதுவும் மணப்பெண் என்பவள் மற்ற திருமணம் புரிய இருக்கும் பல இள வயது பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்... அடக்கம், ஒடுக்கம், நன்னடத்தை, அதிர்ந்து பேசாமல் இருத்தல், பெரியோர்களுக்கு பணிந்து நடத்தல் போன்ற குணங்களை கொண்டவளாக இருத்தல் வேண்டும்...

    அது போன்ற பெண்டிரை காணும் இன்றைய இளைய தலைமுறை பெண்கள் தானும் அதுபோல் இருப்போம் என்று எண்ணினால், வரும் தலைமுறை நல்ல பெண்டிரை கொண்டதாக அமையும்...

    ReplyDelete
  3. hi akka...

    i agree with you.. and you should have also seen the entrance of the groom.. it was the same like this and it was also horrible.. do no why they do such things.. they have spoiled the whole wedding ceremony beauty..

    ReplyDelete
  4. அக்கா, ரொம்ப சரியா சொன்னீங்க - திருமணமாகப் போகும் பெண் இன்னொருவருடையவர். அப்போது, இது போன்ற செயல், அதனை மறக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளது.

    சரி உங்க மலேஷியத்தோழியை விடுங்க.. இங்கே என் நண்பரது முகநூல் வட்டத்தில், இதனைப் பார்த்து மற்ற தோழிகள் சொன்னது - ‘அடடா எங்கள் திருமணத்தில் இதனை தவற விட்டு விட்டோமே’ என்றாம். கொடுமை கொடுமை...

    ஆக, இவர்களைப் போல ‘கலாசார காவலர்கள்’ இருக்கும் வரை, இது போன்ற மிக “பண்பான” செயல்களை இனி அதிகாமாக எதிர்பார்க்கலாம் போல..

    ReplyDelete
  5. hai renuka,where is ur story?
    maha

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

எங்கே நம் தமிழர் பண்பாடு?

திடீர் ஞானோதயம்